"இது என்னடா இது கேள்வி? அதான் எல்லாருக்கும் தெரியுமே! நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள்! இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க? என்னாச்சு கே.ஆர்.எஸ் உனக்கு?" :-)
" ஹிஹி! நீங்க சொன்ன பதில்...பாதி தாங்க சரி! பதிலை இன்னும் நீங்க முழுசா சொல்லலையே? முருகன் தமிழ்க் கடவுள் - சரி தான்! ஆனா முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுளா?"
" அட, நீங்க சொல்லுறத பார்த்தா இன்னொரு தமிழ்க் கடவுளும் இருக்காப் போலத் தெரியுதே! யாருங்க அவரு?"
" உங்களுக்கு, எனக்கு, எல்லாருக்கும்....நல்லா அறிமுகமானவர், "அரி"முகமானவர் தான்! "பெருமாள்" என்று நாட்டு வழக்காக அழைக்கும் திருமால் தான் இன்னொரு தமிழ்க் கடவுள்!"
" அப்படியா சேதி! நான் பெருமாள் எல்லாம் வடக்கத்திச் சாமீ! தமிழகத்துக்குள்ளாற அப்பறமா வந்த சாமீ, வடமொழியோடு இறக்குமதி செய்யப்பட்ட சாமீ-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்!"
"ஹிஹி! உங்க நினைப்பு தப்பு! முருகன் என்றிலிருந்து தமிழ்க் கடவுளா இருக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே பெருமாளும் தமிழ்க் கடவுளாத் தான் இருந்திருக்காரு! நம் சங்க இலக்கியங்கள், இலக்கணங்களில் இது பற்றிய குறிப்புகள் எக்கச்சக்கமாக் கொட்டிக் கிடக்கு!"
" அச்சச்சோ! அவரை இம்புட்டு நாளாத் தமிழ்க்கடவுள் இல்லைன்னு கண்டுக்காம வுட்டுட்டனே! முன்னமே சொல்லி இருந்தாங்கன்னா நானும் ரொம்ப மகிழ்ந்து இருப்பேனே!"
" அட விடுங்க! இதுக்குப் எல்லாம் போயி ஃபீல் பண்ணலாமா? புரட்சித் தலைவர்-ன்னு சொல்லுறோம்! உடனே எம்.ஜி.ஆர் தான் நினைவுக்கு வருவாரு! ஆனா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செய்யாத புரட்சியா?பெரியாரைப் புரட்சித் தலைவர்-ன்னு குறிப்பிடாததால், அவர் புரட்சியே பண்ணலை-ன்னு ஆயிடுமா என்ன? அது போலத் தான்!"
முருகப் பெருமானுக்கும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கும் உள்ள ஐதீகம்/கதைத் தொடர்பின் காரணமாகப், பின்னாளைய புலவர்கள் ஒரு சிலர், "தமிழ்க் கடவுள்" என்ற அடைமொழியை முருகனுக்குத் தந்து மகிழ்ந்தார்கள்! அது எங்கே தந்தாங்க, தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லுற பாட்டு எங்கே இருக்கு-ன்னு கூட யாருக்கும் தெரியாது! :) சினிமாவில் ஏ.பி.நாகராஜன் வசனத்தில் கேட்டுக் கேட்டு, தமிழ்க் கடவுள் அடைமொழி, அப்படியே இன்னிக்கும் நிலைத்து நிற்கிறது! :) அதனால்...முருகன் மட்டுமே "தமிழ்க் கடவுள்", "தமிழர் கடவுள்" என்ற எண்ணம் பரவலாக இருக்கு!
பகுத்தறிவு பேசும் சிலர் கூட, இந்தத் "தமிழ்த் தொடர்பு" என்ற ஒரே காரணத்துக்காக, முருகனை மட்டும் "நம்புவதில்" ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கொள்கிறார்கள்! :-)
ஆனால் நம் தமிழ்க் கலை, தமிழ் இலக்கியங்கள் "தமிழ்க் கடவுள்" பற்றி என்ன தான் சொல்கின்றன? வாங்க பார்க்கலாம்!
(மு.கு: இன்றைய காலத்தில் முத்திரை குத்துதல் என்பது மிகவும் சுலபமான ஒன்று! சொல்லும் கருத்தை விட, அதை யார் சொல்லுறாங்க என்பது தான் மிகவும் முக்கியம்! அதனால் ஒரு மு.கு-வை இப்பவே சொல்லிக்கறேன்பா! பெரும்பாலோர் நினைத்துக் கொண்டபடி, அடியேன் வைணவன் கிடையாது! எங்கள் குல தெய்வம் முருகப் பெருமான் :-) இனி மகிழ்ச்சியா மேற்கொண்டு படிங்க!)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக