திங்கள், 13 செப்டம்பர், 2010

நகைச்சுவைத் துணுக்கு

கஸ்டமரும், சர்வரும்

"சதுரமா, அழகா ஒரு தோசை கொண்டு வாப்பா!"

"சதுரமாவா? எதுக்கு சார்?"

"என் ராசிக்கு வட்ட தோசை ஆகாதுன்னு வாஸ்து ஜோசியர் சொல்லிட்டாரு!"

***

சிறுவனும், அம்மாவும்

"கழுகுக்கு மூக்குல வேர்க்கற மாதிரின்னு சொல்றாங்களே... அப்படீன்னா என்னம்மா?"

"இதோ... இந்த அங்கிள் தினமும் காபி நேரத்துக்கு இங்கே வந்துடுறார் பாரு, அதான்!"

***

நர்சும், பேஷ ண்டும்

"நீங்க ஜோக் எழுத்தாளர்ங்கறது எங்க டாக்ட ருக்கு தெரிஞ்சிப்போச்சு சார்!"

"அட ! என்னைப் பாராட்டினாரோ?"

"இல்லே!....அவரைக் கேலி பண்ணி நீங்க எழுதறதை நிறுத்துற வரைக்கும் உங்களை டிஸ்சார்ஜ் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டாரு!"

***

பெண் பார்க்க வந்த வீட்டில்

"முதல் முதலா பொண்ணு பாக்க வந்த இடத்துல நான்-வெஜ் சாப்பிடறது தப்புங்க!"

"உங்களுக்கு இப்ப வச்சிருக்கறது வடைதானே சார்?"

"பாருங்க, அதுக்குள்ளே ஒரு கரப்பான் பூச்சி வெந்து கிடக்கு!"

***

போலீஸ் இன்ஸ்பெக்டரும், திருடனும்

"கோவில்ல சிலையை திருடறப்ப நீயே மணியடிச்சு வசமா மாட்டிக்கிட்டேயாமே?"

"முதல் திருட்டாச்சேன்னு.. சாமிக்கு பூஜை பண்ணறப்ப மணியடிச்சுத் தொலைச்சிட்டேன் சார்!"

கருத்துகள் இல்லை: