சனி, 28 ஆகஸ்ட், 2010

தாய்-சேய் உறவு

பிறந்த பச்சிளங் குழந்தை தாய் முகம் பாத்திராத போதும் எவ்வாறு தன் தாயை கண்டுகொள்கிறது?]
  தாய் சேய் இடையேயுள்ள நெருங்கிய உறவு தாய் கருத்தரித்தவுடனே தொடங்கி விடுகிறது எனலாம். வயிற்றிலிருக்கும் போதே அன்னையின் இதயத்துடிப்பு, குரலொலி ஆகியவற்றுடன் குழந்தைக்குத் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. பிறந்தவுடனே தாயுடன் ஏற்படுகின்ற நெருக்கமான அணைப்பு, குழந்தைக்கு அன்பான அரவணைப்பைத் தருவதோடு, தாய் சேய் உறவையும் உறுதிப்படுத்திவிடுகின்றது. இவ்வகையில் தொவுணர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது எனலாம். குழந்தைக்குப் பாலூட்டுதல், உணவு ஊட்டுதல், குளிப்பாட்டுதல், கொஞ்சி மகிழ்தல், அணைத்து உறங்கவைத்தல் எனப் பல்வேறு வகையிலும் குழந்தைக்கும் தாய்க்குமிடையே பிணைப்பு மிகுதியாவதால் குழந்தை தன் தாயை எளிதாகக் கண்டு கொள்கிறது. தாயின் உடல் மணம் போன்றவற்றைக் கொண்டு குழந்தை தாயை இனங்கண்டுகொள்ளும்.

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

அல்பம்

நான்

தலைப்பைச் சேருங்கள்

2010 நிலவு

ஏனைய தொழிநுட்ப செய்தி
2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப GMT ]


2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இ‌ன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலவு பூமியிலிருந்து மிகத் தொலைவில் தென்படுவதனாலேயே, நிலவு சிறியதாக காட்சியளிக்கும் என 'ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி. தேவ்கன் தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதத்தில் தோன்றும் இந்த பௌர்ணமி நிலவு, 'தானிய நிலவு' என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் மிகப் பெரிய நிலவை விட இ‌ன்று வானில் தோன்றும் நிலவு, 15 சதவீதம் சிறியதாக காட்சியளிப்பதுடன், ஒளி அடர்த்தி 30 சதவீதத்தால் குறைந்து காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நிலவுக்கும் பூமிக்கும் உள்ள சராசரி தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும்.
ஆனால் இன்றைய தினம் 2 லட்சத்து 52 ஆயிரம் மைல்கள் தூரத்தில் பௌர்ணமி நிலவு உள்ளதால் பார்ப்பதற்கு சிறியதாகத் தோன்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து 2011 ஒக்டோபர் 12ஆம் திகதி இதேபோன்று மிகச் சிறிய பௌர்ணமி நிலவு தோன்றும் எனவும் 'ஸ்பேஸ்' அமைப்பின் இயக்குநர் சி.பி. தேவ்கன் கூறியுள்ளார்.

இயற்கையின் சாமத்தியம்

தீபக மோகன்

இயற்கைவளங்கள், சுற்றுச் சூழல், உயிரினங்களுடன் நெருங்கிச்செல்லும் மாணவர் சமுகம

விஞ்ஞான உலகம் இன்று மனிதனை வளர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது. சூழலியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள் என்று பலர் இன்று தினமும் ஏதோ ஒன்றை கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது படைக்கின்றார்கள். வேட்டையாடி தனது அன்றாட உணவுத் தேவைகளை நிறைவுசெய்துகொண்டிருந்த பண்டைக்கால மனிதனின் பரிணாம வளர்ச்சி, இன்று பாஸ்ட் புட் (Fast Food) யுகம் வரையில் வளர்ந்துவிட்டது. தொடர்பாடலுக்கு புறாக்களை நம்பியிருந்த காலம் போய், இன்றைய தகவல் யுகத்தில் கணினியும், இணையமும் உலகத்தை உள்ளங்கைகளுக்குள் சுருக்கிவிட்டது.
இவையெல்லாம் மனுக்குல வளர்ச்சியின் அற்புதமான விளைவுகள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. இது மட்டுமல்ல, இனிவரும் காலங்களில் இன்று நாம் கற்பனை பண்ணியே பார்த்திராத இன்னும் பல புதிய வளர்ச்சிப் படிகளுக்கும் மனுக்குலம் சென்றுகொண்டே இருக்கப்போகிறது. இதில் குறைகாணவோ, அல்லது அதனைத் தடுத்து நிறுத்தவோ முடியாது.
மனித குலத்தின் இந்தச் சாதனைகள் யாவும் அதன் அறிவியல் வளர்ச்சியின் பெறுபேறுகளே என்றாலும், இயற்கையின் கொடையின்றி இவையெல்லாம் சாத்தியமில்லை. மனுக்குலுப் படைப்புக்கள் எவற்றுக்குமே இயற்கை வளங்களே மூலப்பொருள்கள். மண்ணும், கல்லும் இன்றி கட்டடங்கள் இல்லை. நீர் வீழ்ச்சியோ, இரசாயனப்பொருள்களோ இன்றி மின்சாரம் இல்லை. பெற்றோலியப் படிமங்கள் இன்றி போக்குவரத்து இல்லை. சிலிக்கன் படிமங்கள் இன்றி இன்றைய இலத்திரனியல் கண்டுபிடிப்புக்கள் எவையுமே சாத்தியமில்லை.
ஆக, மனுக்குல அறிவியல் வளர்ச்சியின் சாதனைகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது இயற்கை வளங்களே. அள்ளித்தரும் பூமியின் அனுசரணையின்றி எந்தக் கண்டுபிடிப்புக்களும், படைப்புக்களும் சாத்தியமே இல்லை. அப்படியிருக்க, எல்லாம் எமது சாதனை என்று மனுக்குலம் இறுமாந்திருப்பது எப்படிச் சாத்தியம்?
இந்த இயற்கை வளங்களைக் கொண்டு தான் படைக்கும் சாதனைகளில் இறுமாந்திருக்கும் மனிதர்கள், அவற்றின் விளைவாக இயற்கைக்குத் தீங்குவிளைவிக்கும் காரியங்களையும் செய்து முடிக்கிறான். இயற்கை மூலவளங்களைக் கொண்டு அவன் படைக்கும் சாதனைகளின் விளைபொருள்கள் இயற்கையை நாசம் செய்துகொண்டிருக்கிறது. ஒரு புறத்தில் இயற்கை வளங்கள் அருகிவருகின்றன. மறுபுறம், மனுக்குலப் படைப்புக்களின் கழிவுகளால் இயற்கைச் சூழல் மாசடைந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழல் மாசடைதல் குறித்த எந்த அக்கறையுமின்றி பெருகிவரும் சனத்தொகைக்கும், அதற்கேற்ப அதிகரித்துவரும் புதிய தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் மனித குலத்தின் செயற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.
எனினும், அண்மைக்காலமாக இயற்கை வளங்கள் அருகிவருகின்றமை குறித்தும், சூழல் மாசடைந்து வருவது குறித்தும் மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் விளைவுகள் எதிர்காலச் சந்ததியை படு ஆபத்தான நிலைக்குத் தள்ளும் என்று விஞ்ஞானிகளும், சூழலியல் ஆய்வாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். கிறீன் பீஸ் இயக்கம் போன்ற அமைப்புக்கள் சூழல் தொடர்பான விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.
சூழல் தொடர்பான இந்த விழிப்புணர்வு உண்மையில் இளம் சந்ததியிடம் ஏற்படுத்தப்படுவதே அவசியமானது. இளம் சந்ததி, குறிப்பாக மாணவர் சமுதாயம் இதுகுறித்து அக்கறை கொண்டு செயற்படும்போதே, சூழல் பாதுகாப்பு என்பது உத்தரவாதப்படுத்தப்படும். இதற்கு சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பான விழிப்புணர்வையும், அக்கறையையும் ஊட்டுவது அவசியமானது.
இன்று பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு 3ஆம் தரத்தில் இருந்தே சுற்றுச்சூழல் சம்மந்தமாக கல்வி புகட்டப்படுகிறது. சிறு பராயத்திலேயே பிள்ளைகள் இந்த சுற்றுச்சூழல் குறித்த தமது கல்வியினை ஆரம்பித்து விடுகின்றனர். இது வரவேற்கத்தக்கதாகும் என்று குறிப்பிடுகிறார் பாடசாலை ஆசிரியர் ஒருவர். இதற்கு சிறுவர்கள் மத்தியில் இயற்கையோடு ஒன்றிய வாழ்வுக்கான ஊக்குவிப்பு செய்யப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இன்று நாள் முழுதுவும் காலையில் பாடசாலை, மாலையில் தனியார் கல்வி நிலையம் பின்னர் கணினி வகுப்பு மற்றும் பிற வகுப்புக்கள் என்று கல்விக்காக ஓடித்திரியும் பிள்ளைகளுக்கு சூழல் தொடர்பாக அக்கறை கொள்ளும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. சிறிது நேரமேனும் ஓய்வாக இருந்து, இயற்கையோடு உறவாடும் சந்தர்ப்பம் கிடைத்தாலே இயற்கையின் அருமை சிறுவர்களுக்குப் புரியும். அதனோடு ஒட்டி உறவாடி மகிழும்போதே இயற்கை வளங்கள் அருகிப்போவதாலோ, சூழல் மாசடைவதாலோ ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்த அக்கறை சிறுவர்களுக்கு ஏற்படும்.
இங்கே ஒரு சிறுமி இவ்வாறு இயற்கையோடு ஒட்டி உறவாடும் அழகை நாம் காண்கிறோம். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்லும் மனிதர்களிடையே பாம்புடன் உறவாடும் துணிவும், பரிவும் இவரிடம் இருப்பதைக் காண்கிறோம். கொழும்பு பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் 6ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியான இந்த சகிலா இஃபாம், தனது வீட்டுத் தோட்டத்தில் எந்த நேரமும் சிறு சிறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றார். திடீர் என்று தனது வீட்டுத் தோட்டத்திற்கு வந்த பாம்பொன்றையும் ஸ்பைடறொன்றையும் பிடித்துள்ளார். அதன் விளைவுகள் அறியாததால் அவ் ஸ்பைடரின் தாக்குதலுக்கும் அவர் ஒருதடவை இலக்காகியுள்ளார்.
இயற்கையோடு உறவாடும் தன்னுடைய உள்ளார்ந்த ஆர்வம் காரணமாக பாம்புகளோடு துணிந்து பழகும் அவரது திறமையை இங்கே இந்தப் படங்கள் பறைசாற்றுகின்றன. சுற்றுச் சூழல் என்பது உயிரினத் தொகுதிகளுடன் இணைந்த ஒரு முழுமையாகும் என்று குறிப்பிடும் இந்த மாணவி, எனவே, எம்மைச் சூழவுள்ள அனைத்து உயிரினங்களுடனும் நாம் துணிந்து உறவாடவேண்டும் என்று வாதிடுகிறார்.
எமது சுற்றுச் சூழல் குறித்தும், எம்மைச் சூழவுள்ள உயிரினங்கள் குறித்தும் எம்மிடையே இந்த அக்கறையும், ஆர்வமும் அதிகரித்துச் செல்லுமானால், இயற்கை வளங்களை அழியாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் செய்ய எம்மால் முடியுமல்லவா?

தீபகம் மோகன்

 இஞ்சியின் இயல்பு
  • இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.
  • இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. ஃ
  • மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.
  • பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.
  • ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.
  • பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். ( இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து அதனை காய வைத்தால் சுக்கு கிடைக்கும்)
  இவ்வாறு மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்து பயன் பெறலாமே. அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும்.

வெள்ளைப்பூண்டின் மருத்துவ பயன்கள்:               


  • உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.


  • இதய அடைப்பை நீக்கும்.


  • இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.


  • இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.


  • நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.


  • மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.


  • தாய்ப்பால் சுரக்கும்.


  • மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.
சளித்தொல்லை நீங்க:
1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.
2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலூிக்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
காது அடைப்பு, வலி நீங்க:
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.
குறிப்பு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.


இயற்கை வைத்திய முறைகள் தொடரும்...

யார் கடவுள்

"இது என்னடா இது கேள்வி? அதான் எல்லாருக்கும் தெரியுமே! நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள்! இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க? என்னாச்சு கே.ஆர்.எஸ் உனக்கு?" :-)

"
ஹிஹி! நீங்க சொன்ன பதில்...பாதி தாங்க சரி! பதிலை இன்னும் நீங்க முழுசா சொல்லலையே? முருகன் தமிழ்க் கடவுள் - சரி தான்! ஆனா முருகப் பெருமான் மட்டும் தான் தமிழ்க் கடவுளா?"

"
அட, நீங்க சொல்லுறத பார்த்தா இன்னொரு தமிழ்க் கடவுளும் இருக்காப் போலத் தெரியுதே! யாருங்க அவரு?"

"
உங்களுக்கு, எனக்கு, எல்லாருக்கும்....நல்லா அறிமுகமானவர், "அரி"முகமானவர் தான்! "பெருமாள்" என்று நாட்டு வழக்காக அழைக்கும் திருமால் தான் இன்னொரு தமிழ்க் கடவுள்!"

"
அப்படியா சேதி! நான் பெருமாள் எல்லாம் வடக்கத்திச் சாமீ! தமிழகத்துக்குள்ளாற அப்பறமா வந்த சாமீ, வடமொழியோடு இறக்குமதி செய்யப்பட்ட சாமீ-ன்னு இல்ல நினைச்சிக்கிட்டு இருந்தேன்!"
"
ஹிஹி! உங்க நினைப்பு தப்பு! முருகன் என்றிலிருந்து தமிழ்க் கடவுளா இருக்கத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே பெருமாளும் தமிழ்க் கடவுளாத் தான் இருந்திருக்காரு! நம் சங்க இலக்கியங்கள், இலக்கணங்களில் இது பற்றிய குறிப்புகள் எக்கச்சக்கமாக் கொட்டிக் கிடக்கு!"

"
அச்சச்சோ! அவரை இம்புட்டு நாளாத் தமிழ்க்கடவுள் இல்லைன்னு கண்டுக்காம வுட்டுட்டனே! முன்னமே சொல்லி இருந்தாங்கன்னா நானும் ரொம்ப மகிழ்ந்து இருப்பேனே!"

"
அட விடுங்க! இதுக்குப் எல்லாம் போயி ஃபீல் பண்ணலாமா? புரட்சித் தலைவர்-ன்னு சொல்லுறோம்! உடனே எம்.ஜி.ஆர் தான் நினைவுக்கு வருவாரு! ஆனா பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் செய்யாத புரட்சியா?பெரியாரைப் புரட்சித் தலைவர்-ன்னு குறிப்பிடாததால், அவர் புரட்சியே பண்ணலை-ன்னு ஆயிடுமா என்ன? அது போலத் தான்!"
முருகப் பெருமானுக்கும், மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கும் உள்ள ஐதீகம்/கதைத் தொடர்பின் காரணமாகப், பின்னாளைய புலவர்கள் ஒரு சிலர், "தமிழ்க் கடவுள்" என்ற அடைமொழியை முருகனுக்குத் தந்து மகிழ்ந்தார்கள்! அது எங்கே தந்தாங்க, தமிழ்க் கடவுள்-ன்னு சொல்லுற பாட்டு எங்கே இருக்கு-ன்னு கூட யாருக்கும் தெரியாது! :) சினிமாவில் .பி.நாகராஜன் வசனத்தில் கேட்டுக் கேட்டு, தமிழ்க் கடவுள் அடைமொழி, அப்படியே இன்னிக்கும் நிலைத்து நிற்கிறது! :) அதனால்...முருகன் மட்டுமே "தமிழ்க் கடவுள்", "தமிழர் கடவுள்" என்ற எண்ணம் பரவலாக இருக்கு!
பகுத்தறிவு பேசும் சிலர் கூட, இந்தத் "தமிழ்த் தொடர்பு" என்ற ஒரே காரணத்துக்காக, முருகனை மட்டும் "நம்புவதில்" ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி கொள்கிறார்கள்! :-)
ஆனால் நம் தமிழ்க் கலை, தமிழ் இலக்கியங்கள் "தமிழ்க் கடவுள்" பற்றி என்ன தான் சொல்கின்றன? வாங்க பார்க்கலாம்!
(
மு.கு: இன்றைய காலத்தில் முத்திரை குத்துதல் என்பது மிகவும் சுலபமான ஒன்று! சொல்லும் கருத்தை விட, அதை யார் சொல்லுறாங்க என்பது தான் மிகவும் முக்கியம்! அதனால் ஒரு மு.கு-வை இப்பவே சொல்லிக்கறேன்பா! பெரும்பாலோர் நினைத்துக் கொண்டபடி, அடியேன் வைணவன் கிடையாது! எங்கள் குல தெய்வம் முருகப் பெருமான் :-) இனி மகிழ்ச்சியா மேற்கொண்டு படிங்க!)